திருப்பாவை பாசுரம் 1 - Thiruppavai pasuram 1 in Tamil
AstroVed’s Astrology Podcast - A podcast by AstroVed - Fridays

Categories:
திருப்பாவையில் திவ்ய தேசங்கள் பாதகங்கள் தீர்க்கும், பரமனடி காட்டும். வேதம் அனைத்துக்கும் வித்தாகும் கோதை தமிழ் அறியாத மானிடரை வையம் சுமப்பதும் வம்பு. பெரியாழ்வார் ஆழ்வார்களுள் மிகவும் சிறப்பு வாயந்தவர். அவர் வடபத்ரசாயி பெருமானுக்கு புஷ்ப காரியம் செய்து வந்தார். அவ்வாறு செய்கையில் திருத்துழாய் செடி அருகில் அவருக்கு கிடைத்த குழந்தைக்கு கோதை என்று பெயர் சூட்டி வளர்த்து வந்தார். கிருஷ்ண பக்தி ஊட்டி வளரக்கப்பட்ட கோதை, கண்ணனை அடைய ஆசைப்பட்டாள் என்பது நாம் அறிந்த விஷயம். அவள் எவ்வாறு கோபிகையாக மாறி திருப்பாவை நோன்பை நோற்றாள் என்பதையும் திருப்பாவையுடன் சூசகமாக தொடர்புடைய திவ்ய தேசங்களின் பெருமையும் மதுசூதனன் சுவாமிஅவர்கள் நாம் அனுபவிக்க வழங்குகிறார். அனுபவித்து மகிழ முப்பது நாளும் தொடர்ந்து எங்களுடன் இணைந்திருங்கள். பாசுரம் 1 கண்ணனையே தன்னுடைய மணாளனாக அடைய வேண்டும் என்று ஆசை கொண்டு பாவை நோன்பை நோற்கத் தொடங்கினாள் பெரியாழ்வாரின் பெண்பிள்ளை கோதை. நோன்புக்கு வாய்த்த காலத்தை தனது முதல் பாடலில் அவள் எவ்வாறு கொண்டாடுகிறாள். வெயிலும் அதிகம் இல்லாத குளிரும் அதிகம் இல்லாத மாதத்தின் பெருமை, நாளின் பெருமை மற்றும் பகவானின் கல்யாண குணங்கள் வெளிப்படும் இந்த பாடலின் ஆழ்ந்த அர்த்தத்தை ஒவ்வொரு வார்த்தையின் பொருளையும் மதுசூதன சுவாமி அவர்கள் கூறுகிறார். இந்த பாசுரத்தில் நாராயணனே பறை தருவான் என்ற சொல்லின் படி இதில் கூறப்படும் திவ்ய தேசம் திருப்பரமபதம் ஆகும். பாடலையும் அதன் முழுப் பொருளையும் உணர்ந்து அனுபவிக்க வீடியோவை தொடர்ந்து காணுங்கள்.