கன்னி மார்ச் 2025 மாத ராசி பலன்

AstroVed’s Astrology Podcast - A podcast by AstroVed - Fridays

கணவன் மனைவி உறவில் ஒற்றுமை இருக்கும். பரஸ்பரம்  சிறந்த தருணங்களைப் பகிர்ந்து கொள்வதற்கான வாய்ப்புகள் நிச்சயமாக இருக்கும். என்றாலும் உங்கள் விவகாரங்களில் மூன்றாவது நபரின் தலையீட்டை அனுமதிக்காதீர்கள்.அது உங்கள் உறவின் சுமுக நிலையை கெடுக்கும். உங்கள் வீட்டில் இருக்கும் வயது மூத்த நபர்களுடனான உறவு சிறப்பாக இருக்கும். காதலர்களுக்கு இடையே அற்ப விஷயங்களுக்கெல்லாம் சண்டை வர வாய்ப்புள்ளது. கவனமாக நடந்து கொள்ள வேண்டும்.  உங்கள் நிதி நிலை நம்பிக்கைக்குரியதாக இருக்கலாம். நல்ல லாபம் தரக்கூடிய புத்திசாலித்தனமான முதலீடுகளைச் செய்வதற்கு சாதகமான காலம் இது. குடும்ப உறுப்பினர்களின் வழிகாட்டுதல்கள் மற்றும் ஆலோசனைகள் நிதி சார்ந்த  சரியான முடிவுகளை எடுக்க உதவுவதோடு, செல்வத்தை அதிகரிப்பதற்கான வாய்ப்பை அடையாளம் காணவும் உதவும்.இந்த மாதம் நீங்கள் உத்தியோகத்தில் பிரகாசிப்பீர்கள்.  உங்கள் ஆக்கப்பூர்வமான யோசனைகள் மற்றும் மதிப்புமிக்க பங்களிப்புகளை நிர்வாகம்  உணர்ந்து கொள்ளும். உங்கள் உத்தியோகத்தில்  முன்னேற்றத்திற்கான குறிப்பிடத்தக்க ஆதரவை நிர்வாகம் வழங்கலாம். தகவல் தொழில்நுட்பத் துறையில் பணிபுரிபவர்கள்  தங்கள் பணிக்கான வெகுமதிகளைப் பெற வாய்ப்புள்ளது; இந்த மாதம்  பதவி உயர்வு உங்களுக்காக காத்திருக்கலாம். உற்பத்தி சார்ந்த தொழில்களில் பணிபுரிபவர்கள் தங்கள் மேலதிகாரிகளுடன் சிரமங்களை சந்திக்க நேரிடலாம், இதனால் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் தள்ளிப்போகும். சட்டத் துறையில் உள்ள கன்னி ராசிக்காரர்கள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு பயனுள்ள திட்டங்களில் பணிபுரிவார்கள் மற்றும் அவர்களின் பணிக்கு உரிய அங்கீகாரத்தைப் பெறுவார்கள். ஊடகங்கள் மற்றும் திரைப்படத் துறையில் இருப்பவர்கள்  கணிசமான வருமானம் பெறலாம். மருத்துவத் துறையில் உள்ள கன்னி ராசிக்காரர்கள் அங்கீகாரத்தை பெறலாம்.  தொழில் செய்யும் கன்னி ராசி அன்பர்கள் தங்கள் முதலீடுகளின் மூலம் லாபம் காண பொறுமை காக்க வேண்டும்.  புதிய தொழில் தொடங்க விரும்புவோர், சிறியதாகத் தொடங்குவதே சிறந்த வழியாக இருக்கும். நீங்கள் சில சிறிய உடல்நலப் பிரச்சினைகளை சந்திக்கலாம்.அஜீரணக் கோளாறுகள் வருவதை தடுக்க உண்ணும் உணவில் கவனமாக இருங்கள். மற்றும் காது மற்றும் மூக்கு விஷயங்களிலும் கவனமாக  இருக்க வேண்டும்.பல்கலைக்கழகம் மற்றும் பள்ளியில் படிக்கும் மாணவர்களின் செயல்திறன் சிறப்பாக இருக்கும்.  நீங்கள் அதிக மதிப்பெண்களைப் பெறுவீர்கள்.