மகர மார்ச் 2025 மாத ராசி பலன்
AstroVed’s Astrology Podcast - A podcast by AstroVed - Fridays

Categories:
தந்தை வழி பெரியவர்களுடனான உறவு கடினமாக இருக்கும். அனைத்து சூழ்நிலையிலும் குடும்ப உறுப்பினர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். குழந்தைகள் உங்கள் பேச்சைக் கேட்டு நடந்து கொள்வார்கள். காதலர்கள் இந்த மாதம் தங்கள் உறவில் சில சண்டை சச்சரவுகள் எழுவதைக் காணலாம். இதனால் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் எழலாம். கணவன் மனைவி உறவிலும் கருத்து வேறுபாடுகள் எழலாம். என்றாலும் இது தற்காலிகமானதாக இருக்கும்.வீட்டில் இருக்கும் பெரியவர்கள் அல்லது நெருங்கிய நம்பகமான நண்பர்கள் உங்கள் பிரச்சினை தீர உதவி புரிவார்கள். இந்தமாதம் உங்கள் நிதிநிலை சிறப்பாக இருக்கும். பணம் சார்ந்த பெரிய பிரச்சினைகள் எதுவும் இல்லை என்றாலும் பணத்தைக் கவனமாகக் கையாள வேண்டும். அனாவசியமான செலவுகளை தவிர்க்கவும். பட்ஜெட் அமைத்து உங்கள் வரவு செலவுகளை மேற்கொள்வது நல்லது. அதன் மூலம் ஓரளவு கட்டுப்பாடு இருக்கலாம். மற்றும் பணத்தை சரியாக நிர்வகித்து எதிர் கால நலன் கருதி சேமிப்பை மேற்கொள்ளலாம். இந்த மாதம் உத்தியோகத்தில் நீங்கள் சில தடைகளை சந்திக்க நேரலாம். உங்கள் கடின உழைப்பிற்கான அங்கீகாரம் இந்த மாதம் கிடைக்க வாய்ப்பில்லை. தகவல் தொழில் நுட்பத் துறையில் இருப்பவர்கள் நிர்வாகத்தின் அங்கீகாரம் பெற கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். மருத்துவத் துறையில் இருப்பவர்கள் திருப்திகரமாக செயல்படலாம். மேலும் தங்கள் பணிக்கான அங்கீகாரம் பெறலாம். ஆசிரியர் தொழிலில் இருபவர்கள் நிர்வாகத்தின் பாராட்டைப் பெறலாம். மீடியா மற்றும் திரைத் துறையில் இருப்பவர்கள் வெற்றி காண கடுமையாக உழைக்க வேண்டும். உற்பத்தித் துறையில் இருப்பவர்கள் சற்று தாமதங்களுக்குப் பிறகு வெற்றி காண்பார்கள். ஆராய்ச்சித் துறையில் இருப்பவர்கள் தங்கள் கண்டுபிடிப்பிற்காக பாராட்டு பெறுவார்கள். தொழில் செய்பவர்களும் தங்கள் தொழிலில் வெற்றி பெற தாமதம் ஆகலாம். புதிய தொழில் தொடங்கும் திட்டம் இருந்தால் அதனை தள்ளிப் போடவும். உங்கள் ஆரோக்கியம் இந்த மாதம் சிறப்பாக இருக்கும். உடல் மற்றும் மன ஆரோக்கியம் சீராக இருக்கும். சம நிலையான மன நிலை நீங்கள் ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாகவும் செயல்பட உதவும். பள்ளி மற்றும் கல்லூரி செல்லும் மாணவர்கள் வெற்றி காண கடுமையாக உழைக்க வேண்டும். கடின உழைப்பு ஒன்றே உங்களுக்கான தாரக மந்திரம் ஆகும்.